கடற்கரையில் படுகவர்ச்சி காட்டும் துஷாரா விஜயன்!
சார்பட்டா பரம்பரை படத்தில் மாரியம்மா எனும் கதாப்பாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றவர், துஷாரா விஜயன். இவர் நடித்த முதல் படம், போதை ஏறி புத்தி மாறி என்பதாகும்.
துஷாராவிற்கு தற்போது 26 வயதாகிறது. தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் திறமையான நாயகிகளுள் ஒருவராக உள்ளார், துஷாரா. திண்டுக்கலில் பிறந்த இவருக்கு, ஃபேஷன் துறை மீது ஆர்வம் அதிகம்.
சார்பட்டா பரம்பரை படத்தில் நடிப்பதற்காக வட சென்னை பாஷையை கற்றுக்கொண்டு, தனது கதாப்பாத்திரத்திற்கு உயிர் கொடுத்தார் துஷாரா. இந்த படத்தில் வெகுவாக பாராட்டப்பட்ட சிறப்பம்சங்களுள், துஷாராவின் நடிப்பும் ஒன்று.
2022ஆம் ஆண்டு வெளியான நட்சத்திரம் நகர்கிறது படத்தில் ரெனே எனும் கதாப்பாத்திரத்தில் நடித்து மீண்டும் ரசிகர்களை கவர்ந்தார். அடுத்து, 2023ஆம் ஆண்டு வெளியான கழுவேர்த்தி மூர்க்கன் படமும் அநீதி படமும் ஓரளவிற்கு நல்ல விமர்சனங்களை பெற்றன. ‘இதோ வந்துட்டான்ல கொத்தா என் ஹார்ட்ட எடுத்துன்னு போக..’ என்ற இவரது விமர்சனம் ரசிகர்களால் பெரிதும் பேசப்பட்டது.
துஷாரா, அடுத்து சூப்பர் ஸ்டாருடன் அவரது 170வது படமான ‘வேட்டையன்’ படத்தில் நடிக்கிறார். இதில் அவருடன் மஞ்சு வாரியர், ரித்திகா சிங், ராணா டகுபடி, பகத் ஃபாசில், அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். துஷாரா, வெகு சில படங்களிலேயே நடித்திருந்தாலும் அதற்குள் சூப்பர் ஸ்டாருடன் நடிக்கும் அளவிற்கு உச்சத்தை தொட்டு விட்டார்.
துஷாரா, அவ்வப்போது தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் அவர் தற்போது சில படங்களை வெளியிட்டுள்ளார்.
கடற்கரை மணலில் பிகினி போன்ற உடையுடன் வலம் வருவது போல அவர் சில புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார். இவை வைரலாகி ரசிகர்கள் மத்தியில் லைக்ஸ் மழையினால் நனைந்து வருகிறது.